எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. வேர்க்கடலை - 1 கப்
  2. கடுகு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கேரட் - 1
  5. மாங்காய் - 1 துண்டு
  6. மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - 2 டீஸ்பூன்
  9. கொத்தமல்லி இலை - சிறிதளவு
  10. கருவேப்பிலை - சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பச்சை வேர்க்கடலையை,உப்பு போட்டு,வேக வைத்துக் கொள்ளவும்,..பின்னர் தோலை உரித்து விட்டு கடலை,தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,...

  2. 2

    ஒரு கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு, உளுநது,கருவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு வேகவைத்து எடுத்து வைத்த கடலையை போட்டு கிளறவும்,ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு,போட்டு கிளறி இறக்கவும்,...(உப்பு கம்மியாக போடவும் வேக வைக்கும்போது உப்பு போட்டு வேக வைத்ததால்)

  3. 3

    கடைசியாக பொடியாக நறுக்கி வைத்த, வெங்காயம், கேரட், மாங்காய்,கொத்தமல்லி இலை தூவி, பரிமாறவும்,.. பீச் ஸ்டைல் வேர்க்கடலை மிளகு சுண்டல் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes