தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேருக்கு பரிமாறுவது (சராசரி ஒரு நபருக்கு இரண்டு)
  1. 200 கிராம் ராகி மாவு
  2. 200 மில்லி பால்
  3. ஒரு டீஸ்பூன் சோடா மாவு
  4. 4 டீஸ்பூன் நெய்
  5. துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா (தலா 10)
  6. 200 கிராம் சக்கரை
  7. ஒரு சிட்டிகை உப்பு
  8. 200 மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 200 கிராம் ராகி மாவை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மேலே குறிப்பிட்ட அளவு சோடா மாவு மற்றும் நெய்யை சேர்க்கவும். இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  2. 2

    இந்த கலவையை நன்றாக கலந்து அத்துடன் காய்ச்சிய பாலை சேர்க்கவும். (200 மில்லி பாலை 100 மில்லி அளவு வரும் வரை நன்றாக காய்ச்சி சேர்க்கவும்)

  3. 3

    மாவு மற்றும் பால் ஒன்றாக கலந்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.. தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இதை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

  4. 4

    பின்பு இந்த உருண்டைகளை எடுத்து தட்டையாக அமைத்து நடுவில் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தாவை சேர்த்து உருண்டையாக வைத்து மூடிக்கொள்ளவும். இதை ஒரு கட்லெட் வடிவம் போல் லேசாக தட்டிக்கொள்ளவும்.

  5. 5

    செய்து வைத்திருக்கும் கட்லெட் வடிவ மக்கன் பேடாவை எண்ணையில் போட்டு வருது எடுத்துக்கொள்ளவும். சற்று மிதமான தீயில் வைத்து இதை செய்யவும்.

  6. 6

    சக்கரை பாகு செய்வதற்க்கு, ஒரு பாத்திரத்தில் 200 கிராம் சக்கரை மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

  7. 7

    பொறித்த மக்கன் பேடாக்களை, இந்த சக்கரை பாகில் போட்டு நன்கு ஊறவிட்டு பின்பு பரிமாறினால் தித்திப்பான ராகி மக்கன் பேடா தயார். இந்த சுவையான மற்றும் சத்தான இனிப்பு செய்து இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Wow...that's an amazing healthy dish...never ever tried or heared this before...that's a lovely entry #skvdiwali

எழுதியவர்

suvetha sundar
suvetha sundar @cook_27216193
அன்று

Similar Recipes