உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
  2. 3 பல் துருவிய பூண்டு
  3. 1/4 கப் கொத்தமல்லி தழை
  4. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 1/2 தேக்கரண்டி வத்தல் தூள்
  6. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  7. 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  8. 6 ஸ்லைஸ் ப்ரெட்
  9. 2 தேக்கரண்டி பட்டர் அல்லது நெய்
  10. 1/4 கப் சேவ்
  11. 1/2 பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கொத்தமல்லி தழை, பூண்டு சேர்த்து வதக்கவும் பின் மஞ்சள்தூள், வத்தல் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் உருளைக்கிழங்கு சேர்த்து கிளரி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இப்போது மசாலா தயார் இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்

  3. 3

    பின் ப்ரெட் துண்டுகளின் இருபுறமும் பட்டர் அல்லது நெய் தடவி ஒரு கடாயில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும் பின் ப்ரெட்டின் மேற்பரப்பில் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பவும்

  4. 4

    இதை மேலும் சுவையூட்ட வெங்காய ரிங், சேவ் சேர்த்து நாம் விரும்பிய வடிவங்களில் பரிமாறி அசத்தலாம்

  5. 5

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes