எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1டம்ளர் பச்சரிசி
  2. 1டம்ளர் பாசிப்பருப்பு
  3. 1 1/2 டம்ளர் வெல்லம்
  4. தேவையான அளவு நெய்
  5. தேவையான அளவு முந்திரி பருப்பு,திராட்சை
  6. ஒரு சிட்டிகை கற்பூரம்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் பச்சரிசி, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து குக்கரில் சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கி கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதை கரண்டியால் நன்கு மசித்து விடவும். வாணலியில் வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  3. 3

    பிறகு வெல்ல கரைசலை வடிகட்டி எடுத்து குக்கரில் மசித்து வைத்துள்ள அரிசி பருப்புடன் ஊற்றி கலந்து விடவும். கோவில் பிரசாதம் சுவையை தருவதற்கு கற்பூரம் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை பொன்னிறமாக வறுத்து எடுத்து பொங்கலில் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    தேவைப்பட்டால் நெய் சிறிதளவு ஊற்றி நன்கு கலந்து விடவும். சுவையான கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes