சில்லி எக் கிரேவி

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#vahisfoodcorner இது பிரைட் ரைஸ்க்கு அருமையான ஒரு சைட் டிஷ்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
2பேர்கள்
  1. 4வேக வைத்த முட்டை
  2. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/2கரம் மசாலாத்தூள்
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 3ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  6. 1வெங்காயம்
  7. 1குடைமிளகாய்
  8. 1ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  9. 1ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  10. 1ஸ்பூன் சோயா சாஸ்
  11. 1பச்சை மிளகாய்
  12. 6பல் பூண்டு
  13. 1சிறிய துண்டு இஞ்சி
  14. தேவையான அளவு உப்பு
  15. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  16. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் வேக வைத்த முட்டையை நன்றாக துருவிக் கொள்ளவும்... அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, இரண்டு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்...

  2. 2

    எண்ணெய் நன்றாக காய்ந்ததும் முட்டைக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

  3. 3

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்..

  4. 4

    அத்துடன் வெங்காயம் குடமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.. அத்துடன் எல்லா சாஸையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

  5. 5

    ஒரு ஸ்பூன் கார்ன் பிளாரை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும்... கொதிக்க ஆரம்பித்ததும் அத்துடன் வறுத்து வைத்த முட்டையையும் சேர்க்கவும்..

  6. 6

    நன்றாக கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்..

  7. 7

    இப்போது அருமையான சில்லி எக் கிரேவி தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes