தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 1/4 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 முட்டை
  4. 6 பல் பூண்டு
  5. 1 டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
  6. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
  8. 1டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்
  9. 1டேபிள்ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  10. 3 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  11. 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  12. தேவையான அளவு உப்பு
  13. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன் கழுவி சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் முட்டை மிளகாய்த்தூள்

  2. 2

    மிளகுத்தூள் உப்பு கார்ன்ஃப்ளார்

  3. 3

    மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து

  4. 4

    எண்ணெய் சூடானதும் கலந்து வைத்த சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு மஞ்சூரியன் செய்வதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பிறகு சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ கெட்சப்

  7. 7

    சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  8. 8

    கலந்த கலவையை மசாலாவில் சேர்த்து கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் கொதித்த பிறகு

  9. 9

    பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து இறக்கவும்

  10. 10

    சுவையான சிக்கன் மஞ்சூரியன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes