தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 8 முட்டை
  2. 6வெங்காயம்
  3. 15 பல் பூண்டு
  4. 2 துண்டு இஞ்சி
  5. 4வரமிளகாய்
  6. 2 துண்டு பட்டை
  7. 2 கிராம்பு
  8. 1அன்னாச்சி பூ
  9. 1 ஜாதி பத்ரி
  10. 2ஏலக்காய்
  11. 1 ஸ்பூன் சோம்பு
  12. 1 ஸ்பூன் கசகசா
  13. 1 ஸ்பூன் சீரகம்
  14. 4தக்காளி
  15. 1/2 கப் தேங்காய் துருவல்
  16. 10 முந்திரி
  17. 4 ஸ்பூன் நெய்
  18. 100 மில்லி கடலெண்ணெய்
  19. 1 ஸ்பூன் கடுகு
  20. சிறிதுகறிவேப்பிலை
  21. சிறிதுகொத்தமல்லி தழை
  22. 2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  23. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  24. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாச்சி பூ ஜாதி பத்ரி சோம்பு சீரகம் கசகசா வரமிளகாய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் பின் தக்காளி ஐ தனியாக அரைத்து எடுக்கவும் பின் தேங்காய் துருவல் உடன் முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் பின் மல்லித்தூள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும் பின் உரித்த முட்டை சேர்த்து நன்கு கிளறவும் முட்டை உடன் சேர்த்து மசாலா நன்கு சேர்ந்து சுருண்டு வரும் வரை நன்றாக கிளறவும் பின் கொத்தமல்லி தழை தூவி விடவும்

  6. 6

    நெய்யை ஊற்றி நன்கு ட்ரை ஆகும் வரை கிளறி இறக்கவும்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான முட்டை கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes