மேஷ்டு பொட்டேடோ ஸ்காட்ச் எக்ஸ்(Mashed Potato Scotch Eggs)

Sowmya
Sowmya @vishalakshi

#vahisfoodcorner
முட்டையை பொதுவாக நாம் பலவிதமாக செய்து உண்ணலாம் அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஸ்காட்ச் எக்ஸ் சுலபமாக தயாரித்து உண்ணலாம்... அதையும் நாம் உருளைக்கிழங்கை கொண்டு மிகவும் ருசியாக செய்து உண்ணலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 3 முட்டை
  2. 4பிரட் துண்டுகள்
  3. 1பெரிய உருளை கிழங்கு
  4. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1 பெரிய வெங்காயம்
  8. 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. 1கையளவு கொத்தமல்லி
  12. தேவையானஅளவு உப்பு
  13. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்து அதன் ஓடை எடுத்துவிட்டு முட்டையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அடுத்து பிரட் தூள் தயாரிப்பதற்காக ஒரு 4 ஸ்லைஸ் பிரட் களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும் பிறகு ஒரு கடாயில் நாம் பொடியாக்கிய பிரெட் தூளை சேர்த்து அது மொறுமொறுவென்று வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் இந்த சமயத்தில் அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து செய்ய வேண்டும்

  3. 3

    நன்றாக பிரெட்டின் வாசனை வந்து அது மொறுமொறுவென்று வறுபட்டதும் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொள்ளலாம்

  4. 4

    அடுத்து ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை தண்ணீரில் அலசி விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொண்டு தோலை நீக்கி அதனை நன்றாக மசித்து விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    பிறகு ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சியையும் ஒரு பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    அடுத்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  7. 7

    பிறகு அதில் 1/4 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்

  8. 8

    அடுத்து அதில் ஒரு கை அளவு கொத்தமல்லி இலைகளை தூவி நன்றாக கலந்து விட்டு அதனை நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்க வேண்டும்

  9. 9

    மசித்த உருளை கிழங்கையும் நாம் சேர்த்துள்ள மசாலாப் பொருட்களையும் நன்றாக கலந்துவிட வேண்டும்

  10. 10

    அடுத்து கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு உருளைக்கிழங்கு மசாலாவில் இருந்து ஒரு உருண்டையை பிடித்து அதனை தட்டையாக தட்டி அதனுள் நாம் வேகவைத்து எடுத்துக் கொண்டுள்ள அவித்த முட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  11. 11

    பிறகு முட்டை வெளியே தெரியாத அளவிற்கு நாம் இரண்டு கைகளையும் கொண்டு முட்டையை சுற்றி உருளைக்கிழங்கு மசாலா கலவை வரும்படியாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  12. 12

    பிறகு ஒரு பாத்திரத்தில் தனியாக ஒரு முட்டையை உடைத்து அதனை ஸ்பூன் கொண்டு நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்

  13. 13

    அடுத்து ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்

  14. 14

    அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள முட்டை உருளைக்கிழங்கு உருண்டையை நாம் தனியாக கலக்கி வைத்துள்ள முட்டையில் கலக்கி ஒரு முறை எடுத்து பின்பு அதனை நாம் தயாரித்து வைத்துள்ள பிரட் தூள் சேர்த்து எல்லா புறமும் படும்படியாக உருட்டி எடுக்க வேண்டும்

  15. 15

    இப்போது எண்ணெய் சூடானவுடன் நாம் பிரெட் கிரம் சில் உருட்டிய உருளை முட்டை உருண்டையை எடுத்து எண்ணெயில் சேர்த்து இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுக்க வேண்டும்

  16. 16

    இரண்டு புறமும் பொன்னிறமானதும் அதனை எண்ணெயில் இருந்து எடுத்து தனியாக ஒரு வடிதட்டில் வைத்து எண்ணெயை வடிய விடலாம்

  17. 17

    ஒரு இரண்டு நிமிடம் கழித்து என்னை முழுவதும் வடிந்தவுடன் நாம் அதனை சரி பாதியாக வெட்டி அதனை பரிமாறலாம் இதோ மிகவும் சுவையான மேஷ்டு பொட்டேடோ ஸ்காட்ச் எக்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes