முருங்கைக்காய் கூட்டு

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நி
3 பரிமாறுவது
  1. முருங்கைக்காய் 5
  2. தக்காளி 🍅 2
  3. பெரிய வெங்காயம் 1
  4. கருவேப்பிலை
  5. பச்சை மிளகாய் 3
  6. எண்ணெய் 1கரண்டி
  7. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  9. உப்பு
  10. சோம்பு தூள் 1ஸ்பூன்
  11. தேங்காய்த் துருவல் 2 கரண்டி
  12. கசகசா ஒரு ஸ்பூன்
  13. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சோம்பு

சமையல் குறிப்புகள்

20நி
  1. 1

    முருங்கக்காய் பிஞ்சாக இருந்தால் சுவையாக இருக்கும் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் தக்காளி வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்

  2. 2

    அடுப்பை பற்ற வைத்து தவாவை வைத்து சூடானதும் என்னை விட்டு கறிமசால் பட்டை பிரிஞ்சி இலை போட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் அதிலேயே முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும்

  3. 3

    அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு தேங்காய் கசகசா அரைத்த கலவை கருவேப்பில்லை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு வேகவிட வேண்டும்

  4. 4

    நன்கு வதக்கி விட்டால் தண்ணீர் இல்லாமல் சாதத்திற்கு கூட்டாக வைத்துக்கொள்ளலாம் கொஞ்சம் கிரேவியாக வைத்தால் இட்லி சப்பாத்தி தோசை பூரிக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் விருப்பப்பட்டால் சிறிது பருப்பு வேகவைத்து சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes