சுவைமிக்க அவல் முறுக்கு

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடங்கள்
25 முறுக்கு
  1. 1 கப் அவல்
  2. 1/2 கப் பொட்டு கடலை
  3. 1,1/4 கப் அரிசி மாவு
  4. 1டேபிள்ஸ்பூன் வெண்ணை
  5. 1ஸ்பூன் எள்ளு
  6. பெருங்காயம், உப்பு
  7. பொரிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவல் பொ ட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து சலித்து எடுத்துக்கவும்.

  2. 2

    அத்துடன் அரிசி மாவு, வெண்ணை, எள்ளு, உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து தேவையான தண்ணி விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு சாப்ட் மாவாக பிசைந்துக்கவும்

  3. 3

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில். முறுக்கு நாழியில் மாவை நிரப்பி எண்ணையில் நேராக முறுக்கு பிழிந்து விடவும்.

  4. 4

    இரண்டு பக்கவும் திருப்பி விட்டு ரொம்ப சிவந்து போகாமல் பாத்து எடுத்து விடவும்.. சுவையான அவல் முறுக்கு தயார்.. வாயில் போட்டதும் கரைந்து விடும். அந்த அளவு காரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும் அவல் முறுக்கு.... செய்து பார்த்து ருசிக்கவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes