கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 150 கிராம் துவரம் பருப்பு
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்
  4. 15 கொம்பு அவரக்காய்
  5. 1முழு முள்ளங்கி
  6. 10சிறிய வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 3டீ ஸ்பூன் சாம்பார் தூள்
  9. சிறியஎலுமிச்சை அளவு ஊற வைத்த பு புளி
  10. தாளிக்க
  11. 1 டீஸ்பூன் கடுகு
  12. 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  13. 1/4 டீஸ்பூன் பெருங்காய தூள்
  14. 2வரமிளகாய்
  15. 1டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  16. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி
  17. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பை மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை தோல் சீவி விட்டு வட்ட வடிவத்தில் அரிந்து கொள்ளவும் கொம்பு அவரைக்காயைஇரண்டு சென்டி மீட்டர் அளவிற்கு அ ரிந்து கொள்ளவும். வெங்காயம் தோலுரித்து கொள்ளவும்m தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

  2. 2

    புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயத் தூள் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து பிறகு அதில் முள்ளங்கியை பச்சை வாசம் போக வதக்கிக் கொள்ளவும். சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அவரைக்காயை சேர்த்து சாம்பார் தூள் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

  4. 4

    வேகவைத்த பருப்பில் ரசத்திற்கு பருப்பு தண்ணீர் தேவை என்றால் எடுத்துக்கொண்டு பருப்பை ஒரு கடை கடைந்து வேக வைத்த காயில் சேர்க்கவும். தேவை என்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் தக்காளியை பச்சையாக சேர்க்கவும். தக்காளி வேகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு புளித்தண்ணீரை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும். இப்போது துருவிய தேங்காயை அரைத்தோ அல்லது அப்படியோ சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான காய்கறிகள் சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes