எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. நாட்டுக் கோழி கறி
  2. வெங்காயம்
  3. இஞ்சி
  4. பூண்டு
  5. பட்டை
  6. ஏலக்காய்
  7. புதினா
  8. கொத்தமல்லித்தழை
  9. மிளகாய் தூள்
  10. மஞ்சள் தூள்
  11. உப்பு
  12. பச்சை மிளகாய்
  13. பட்டை ஏலக்காய் தூள்
  14. மல்லித்தூள்
  15. தக்காளி
  16. சீரகம்
  17. மிளகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    நாட்டுக் கோழி கறி -ஐ சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் குக்கர் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின் பட்டை ஏலக்காய் தூள்,சீரகம், மிளகு சேர்த்து அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும். நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதங்கியதும் நாட்டுக் கோழி கறி -ஐ சேர்க்கவும்.

  4. 4

    பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள்,சேர்த்து கிளறி விட்டு தண்ணீர் சேர்க்கவும்.

  5. 5

    நன்றாக கிளறி விட்டு குக்கர் -ஐ மூடி வைத்து 5 அல்லது 6 விசில் விட்டு இறக்கவும்.

  6. 6

    பின் விசில் அடங்கியதும் சிறிதளவு,கொத்தமல்லித்தழை, மிளகு தூள் மற்றும் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes