முட்டை தொக்கு

Vedha Priya
Vedha Priya @cook_16956435
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வேக வைத்த முட்டை – 4
  2. வெங்காயம் – 1 பெரியது
  3. தக்காளி – 2
  4. மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  5. கரம்மசாலாபொடி – 1 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு+எண்ணெய் – தேவைக்கு
  8. சோம்பு – 1 டீஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  10. கறிவேப்பிலை – சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து 2 ஆக வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்

  3. 3

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கிய பின் தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  4. 4

    தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிவும் போது கொத்தமல்லிதழை துவி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vedha Priya
Vedha Priya @cook_16956435
அன்று

Similar Recipes