முருங்கை கீரை பொரியல் 🥗☘️

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#lockdown
இரும்பு சத்து நிறைந்த இந்த பொரியல் பயறு சேர்த்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4பேர்
  1. 2 கப் ஆய்ந்த முருங்கைக்கீரை
  2. 1/2கப் ஊற வைத்த காராமணி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 1/4 கப் தேங்காய் துருவல்
  7. தேவையானஅளவு- எண்ணெய்
  8. தேவையானஅளவு- உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முருங்கைக் கீரை மற்றும் ஊற வைத்த காராமணியை தனித்தனியே சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும். (வடித்த நீரை வீணாக்காமல் மிளகுத்தூள் சேர்த்து சூடாக சூப் செய்து அருந்தலாம்).முருங்கைக் கீரையை தண்ணீர் இல்லாமல் பிழிந்து அதனுடன் காராமணியை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். அதன்பின் வேகவைத்த கீரை மற்றும் காராமணி கலவையை சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.

  3. 3

    சுவையான சத்து நிறைந்த முருங்கைக் கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes