ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#immunity

ப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கடலை மாவு
  2. 1 கப் துருவிய ப்ரோக்கோலி
  3. 1 கப் துருவிய கேரட்
  4. 1/4கப் துருவிய குடைமிளகாய்
  5. 1/4கப்துருவிய பன்னீர்
  6. 1 வெங்காயம்
  7. 1/4டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
  8. 1/2டீஸ்பூன் மிளகு
  9. 1 பொடியாக நறுக்கிய ஒரு பச்சைமிளகாய்
  10. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  11. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உப்பு & மஞ்சள்தூள் சேர்த்த கொதிக்கும் நீரில், 3 நிமிடம் ப்ரோக்கோலி கொதிக்க வைத்து பொடியாக துருவிக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் படத்தில் உள்ளது போல் பொடியாக அறிந்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிளகுத் தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, அதில் 1 கப் கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும.

  3. 3

    பிளாட் ஃப்ரை பான் அல்லது தோசை கடாயை சூடாக்கி 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சேர்க்கவும். மாவை சிறிய டிக்கி போல் செய்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேக வைத்து சுட்டெடுக்கவும். சுவையான ப்ரோகோலி டிக்கி ரெடி.

  4. 4

    வேண்டுமெனில் துருவிய அனைத்து காய்கறிகளையும் சிறிது வதக்கி ஆறவைத்து, பின்பு அதில் கடலை மாவு சேர்த்து பிசைந்து செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes