தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேர்
  1. 1/2கிலோ- தக்காளி
  2. 15-சின்ன வெங்காயம்
  3. 10பல்-பூண்டு
  4. 10-வர மிளகாய்
  5. 1-கொத்து கறிவேப்பிலை
  6. 1/4கப்-எண்ணெய்
  7. 1-டீஸ்பூன் கடுகு
  8. 1/2-டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பின் வரமிளகாயை கிள்ளி போட்டு வதக்கவும்அதன்பின் நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.அதன் பின் தக்காளியை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறி விடவும். மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.அதன் பின் தக்காளி நன்றாக கரைந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இறக்கிவிடவும்.

  2. 2

    சுவையான தக்காளி தொக்கு தயார். இதனை சாதத்துடன் மற்றும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes