ஆல்இன் ஆல் தக்காளி தொக்கு

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#deepfry #pickle
எவ்வளவுதான் வகைவகையா சமைச்சு வச்சாலும் ஊறுகாய் தொக்கு இருந்தா ருசியே தனிதான். இன்னைக்கு நம்ம தக்காளி தொக்கு சுவையாக செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. நாட்டு தக்காளி 2
  2. வரமிளகாய் 1
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. காரப்பொடி 1/2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம்
  7. உப்பு
  8. நல்லெண்ணெய்
  9. கறிவேப்பிலை 1 கொத்து

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பழுத்த நாட்டு தக்காளியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் 4 ஸ்பூன் விட்டு கடுகு கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

  3. 3

    நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    காரப்பொடி, மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    இப்போது அதன் பச்சை வாடை குறைந்து எண்ணெய் ஊறுகாயை சுற்றி தெரியும்.

  6. 6

    இது தக்காளி நன்றாக வெந்து நல்ல பதத்தில் உள்ளதை காட்டுகிறது.

  7. 7

    இந்நிலையில் அடுப்பை ஆஃப் செய்து சிறிது ஆறியதும் காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.

  8. 8

    இப்போது சுவையான தக்காளி தொக்கு ரெடி.

  9. 9

    சாதம், இட்லி தோசை சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்ஷாக பரிமாற சுவை கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes