காளான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | புரோட்டீன் நிறைந்த உணவு

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

#nutrient1
காளான் உண்பதால் கிடைக்கும் பயன்களுள் சில
1.புரோட்டீன் சத்து அதிகம்
2.ரத்த அழுத்தத்தை சீராக்கும்
3.வைட்டமின் டி நிறைந்துள்ளது
4.நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்
5.நீரிழிவு நோய்க்கு ஏற்ப உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. காளான் 250கி
  2. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 1
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. மைதா மாவு 3 மே.க
  6. சோள மாவு 2 மே.க
  7. தக்காளி சாஸ் 2 மே.க
  8. மிளகாய் பூண்டு சாஸ் 2 மே.க
  9. வினிகர் 1 மே.க
  10. சீனி 1மே.க
  11. உப்பு
  12. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    காளான் காம்பை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு மற்றும் நறுக்கிய காளான் காம்புகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    காம்புகள் நீக்கிய காளானில் தயார் செய்த உருளைக்கிழங்கு காளான் கலவையை வைக்கவும்

  5. 5

    அதை தயார் செய்த மைதா கரைசலில் முழுவதும் நன்றாக நனைத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  6. 6

    கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின்னர் தக்காளி சாஸ், மிளகாய் பூண்டு சாஸ், வினிகர், சீனி,சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்

  8. 8

    பிறகு பொரித்த காளான் துண்டுகளை சேர்த்து 2நிமிடம் சாஸ் வற்றும் வரை கிளறி விடவும்

  9. 9

    சாஸ் வற்றியதும் கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்

  10. 10

    புரோட்டீன் நிறைந்த காளான்உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes