தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 200கிராம் பிஞ்சு கத்தரிக்காய்
  2. 4முருங்கை காய்
  3. 1கைப்பிடி அளவு முருங்கை கீரை
  4. 2பெரிய வெங்காயம்
  5. 1சின்ன லெமன் அளவு புளி
  6. கல் உப்பு தேவையான அளவு
  7. 1/4கப் நல்லெண்ணெய்
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 1/4ஸ்பூன் வெந்தயம்
  10. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 2டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  13. கொத்தமல்லி தழை சிறிது
  14. கறிவேப்பிலை சிறிது
  15. மசாலா அரைக்க:
  16. 12சின்ன வெங்காயம்
  17. 3தக்காளி
  18. 2டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதை
  19. 1ஸ்பூன் சீரகம்
  20. 1டேபிள்ஸ்பூன் கருப்பு எள்ளு
  21. 3_4 வரமிளகாய்
  22. 4பல் பூண்டு
  23. இஞ்சி சிறிய துண்டு
  24. கறிவேப்பிலை சிறிது
  25. 3டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  26. 2டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கிக் தண்ணீரில் போடவும் முருங்கைக்காயை நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    கத்தரிக்காயை தனியாக சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்

  5. 5

    வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய முருங்கை காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்

  6. 6

    முருங்கை காய் வெந்ததும் உருகி வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்க விடவும் பின் புளிக்கரைசலை ஊற்றி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  7. 7

    நன்கு கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  8. 8

    சற்று கொதித்ததும் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து சிறிது கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  9. 9

    சுவையான கத்தரி முருங்கை கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes