எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கார கொழுக்கட்டை :
  2. 1கப் புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. 1/4கப் தேங்காய் துருவல்
  4. 1நறுக்கிய வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. கொத்தமல்லி
  9. உப்பு
  10. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  11. இனிப்பு கொழுக்கட்டை
  12. 1கப் புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  13. 1/4கப் தேங்காய் துருவல்
  14. 1/2கப் வெல்லக்கரைசல்
  15. 1டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
  16. சிறிதுஏலக்காய் தூள்
  17. 2டேபிள்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தேங்காய் துருவல் ஊற அரிசியை சேர்த்து முதலில் கரக்கரப்பாக அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பததிற்கு அரைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடலைப்பருப்பு பச்சைமிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும் பின்பு அடுப்பை குறைத்து அரைத்த மாவை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்

  3. 3

    கையில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவை எடுத்து உள்ளம் கையால் அழுத்திப்பிடிக்கவும் இப்போது பிடித்த கொழுக்கட்டை இட்லி பாணியில் 15நிமிடம் மிதமான தியில் வேக வைக்கவும்

  4. 4

    இப்போது கார கொழுக்கட்டை தயார்

  5. 5

    மிக்ஸியில் தேங்காய் துருவல் அரிசியை சேர்த்து முதலில் கரக்கரப்பாக அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பததிற்கு அரைக்கவும்... பின்பு இதில் வெல்லக்கரைசல் தேங்காய்துருவல் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்

  6. 6

    ஒரு கடாயில் நெய் சேர்த்து மாவை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.. கையில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவை எடுத்து உள்ளம் கையால் அழுத்திப்பிடிக்கவும்...

  7. 7

    இப்போது பிடித்த கொழுக்கட்டை இட்லி பாணியில் 15நிமிடம் மிதமான தியில் வேக வைக்கவும்... இனிப்பு கொழுக்கட்டை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes