தேவையான பொருட்கள்

  1. 6 பிரட் ஸ்லைஸ்
  2. 1 தக்காளி
  3. பூண்டுப்பல் 3
  4. சிறியதுண்டு இஞ்சி
  5. தயிர் 2 ஸ்பூன்
  6. பெரிய வெங்காயம் ஒன்று
  7. நெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  10. தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  11. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

  2. 2

    தக்காளி துண்டுகளை பூண்டு இஞ்சி தயிர் மிளகாய்த் தூள் தனியாத் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்

  4. 4

    பிறகு அரைத்து வைத்த விழுதுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சத்தூள் இவற்றைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்.

  5. 5

    இதனுடன் நறுக்கிய பிரெட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    பிரட் மசாலாவை கொத்தமல்லி இலைகளை மேலே தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes