உருளைக்கிழங்கு மசாலா கிரேவி

N Saravanan
N Saravanan @NSaravanan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 4உருளைக்கிழங்கு
  2. எண்ணெய் 2 tbsp
  3. கடுகு 1/2 ஸ்பூன்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 1
  6. கருவேப்பிலை
  7. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  8. 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  9. பச்சை பட்டாணி 50 கிராம்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும் கடுகு பொறிய ஆரம்பித்தவுடன் சீரகம், கீறிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும் பட்டாணி முக்கால் பாகம் வெந்தவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பச்சை வாசனை போனதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 7நிமிடங்கள் வரை நன்றாக வேகவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

N Saravanan
N Saravanan @NSaravanan
அன்று

Similar Recipes