எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
  1. 2உருளைக்கிழங்குகள்
  2. 1வெங்காயம்
  3. 1டேபிள் ஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்
  4. 1/4கப் வால்நட் துண்டுகள்
  5. 1/4கப் வால்நட் பொடித்தது
  6. மல்லி இலை
  7. மல்லி இலை நருக்கியது
  8. ஸ்பிரிங் ரோல் ஷீட்
  9. 1/4டீஸ்பூன் ஒரிகானோ
  10. 1/4 டீஸ்பூன் பேசில்
  11. 2டேபிள் ஸ்பூன் செட்டர் சீஸ்
  12. 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  13. தேவையான அளவுஉப்பு
  14. 1டீஸ்பூன் எண்ணெய்
  15. 2ஸ்பிரிங் ரோல் ஷீட்
  16. 1டேபிள் ஸ்பூன் மைதா

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும். வெங்காயம்,
    மல்லி இலை நறுக்கி வைக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌலில் மைதா மாவை சேர்த்து தண்ணீரில் கரைத்து பேஸ்ட் போல் செய்து வைக்கவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். சில்லி ஃப்ளெக்ஸ்,வேகவைத்து உருளைக் கிழங்கை மசித்து சேர்க்கவும்.

  5. 5

    நன்கு வதக்கி ஒரிகாநோ, பேசில், வால்நட் பொடித்து வைத்துள்ள பவுடர் சேர்த்து, உப்பு சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும் ஸ்டாப் செய்ய மசாலா தாயார்

  6. 6

    பின்னர் ஸ்பிரிங் ரோல் ஷீட் எடுத்து தேவையான அளவு கட் செய்து,தயார் செய்து வைத்துள்ள மசாலாவை நடுவில் வைத்து, சீஸ் துருவல், வால்நட் துண்டுகள் வைத்து, ஓரங்களை மைதா பேஸ்ட் தேய்த்து,ரோல் செய்யவும். எல்லாம் இதே போல் ரோல் செய்து வைக்கவும்.

  7. 7

    கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி காய்ந்ததும்,தயார் செய்து வைத்துள்ள ஸ்பிரிங் ரோல்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  8. 8

    தயாரான ஸ்பிரிங் ரோல்ஸ் களை எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான, வால்நட் சுவை கலந்த, சத்தான வால்நட் கிரன்சி ஸ்பிரிங் ரோல்ஸ் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes