தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 100கிராம் கடலைப்பருப்பு
  2. 50கிராம் வால்நட்
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 3 வரமிளகாய்
  5. 1 ஸ்பூன் சோம்பு
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. சிறிய துண்டு இஞ்சி
  8. 5 பூண்டுபல்
  9. ஒரு கொத்து கறிவேப்பிலை
  10. ஒரு கொத்து கொத்தமல்லி
  11. தேவையான அளவுஉப்பு
  12. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டுபல் எல்லாம் போட்டு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

  3. 3

    பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பை தண்ணீர் வடித்து விட்டு அந்த மிக்ஸி ஜாரில் போடவும். பிறகு வால்நட்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கடலைப்பருப்புடன் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

  4. 4

    பிறகு அரைத்த வடை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு போட்டு எல்லாத்தையும் நன்கு கிளறவும்.

  5. 5

    பிறகு அவற்றுடன் பொடியாக நறுக்கிய 3 வால்நட்டை அதில் போட்டு கிளறவும்.

  6. 6

    பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரல்களால் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  7. 7

    சுவையான வால்நட் வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes