செட்டிநாடு ரசம். #refresh1

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

செட்டிநாட்டில் இந்த ரசம் மிகவும் பிரபலம்.தாளிக்கும் போது மிளகாய் வற்றலும்,பெருங்காயத் தூளும் போடுவதில்லை.கொத்தமல்லிதழைதான் பயன்படுத்துகின்றார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.உ.பருப்பை வறுத்து செய்வதால் எலும்புகளுக்கு தேவையான வலுவை கொடுக்கும்.இதில் சேர்க்கப்பட்டிருக்கும் தனியா,மிளகு,சீரகம் உடலுக்கு நலத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/4மணி
6பேர்
  1. 1ஸ்பூன்தனியா
  2. 1ஸ்பூன்உ.பருப்பு
  3. 1ஸ்பூன்மிளகு
  4. 1ஸ்பூன்சீரகம்
  5. கோலி குண்டளவுபுளி
  6. 1ஸ்பூன்நெய்
  7. 1 ஸ்பூன்எண்ணெய்
  8. 1டீஸ்பூன்ம.தூள்
  9. 1டீஸ்பூன்கடுகு
  10. 2மிளகாய்
  11. கல் உப்பு ருசிக்கு
  12. 1ஆர்க்குகறிவேப்பிலை
  13. 1டீஸ்பூன்பெருங்காயம்
  14. 1தக்காளி
  15. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/4மணி
  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்,தனியா,உ,பருப்பு,மிளகு,சீரகத்தை நன்குவறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்ததை ஆறினதும் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    புளியை ஊறவைத்து,பிறகு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.கடாயில் நெய் காய்ந்ததும் கடுகு,சீரகம்,மிளகாய்,கறிவேப்பிலைபோட்டு வறுக்கவும்,நறுக்கின தக்காளி,ம.தூள் போட்டு வதக்கினதும் புளிக்கரைசலை விட்டு,பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும்.

  4. 4

    கொதித்து புளி வாசனை போனதும் வறுத்தபொடியை போட்டு கடைசியாக உப்பையும் போட்டு பொங்கி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

  5. 5

    மிகவும் சுவையான,ஆரோக்கியமான,"செட்டிநாடு ரசம்",தயார்.முக்கியமாக கொத்தமல்லி தழை போடவும்.என்னிடம் இல்லாததால் கறிவேப்பிலை போட்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes