வெஜ் கப்ஸா (அரபிக் வெஜ் பிரியாணி)

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
Dubai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேருக்கு
  1. தரமான பாசுமதி அரிசி - அரைகிலோ
  2. எண்ணை + பட்டர் – 50 கிராம்
  3. காய்ந்த எலுமிச்சை – 1
  4. வெங்காயம் – 1 பெரியது
  5. கேரட் – 50 கிராம்
  6. பீட்ரூட் – 50 கிராம்
  7. கார்ன் – 50 கிராம்
  8. புரோக்கோலி – 50 கிராம்
  9. தக்காளி பேஸ்ட் – 25 கிராம்
  10. தக்காளி – அரை பழம்
  11. மேகி அல்லது நார் பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக் 1 துண்டு
  12. அரபிக் கப்ஸா மசாலா
  13. கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
  14. சீரகம் – முக்கால் தேக்கரண்டி
  15. பப்பரிக்கா – கால் தேக்கரண்டி
  16. முழுதனியா – ஒரு தேக்கரண்டி
  17. கிராம்பு - 2
  18. ஜாதிக்காய் – கால் தேக்கரண்டி
  19. பட்டை – 1 இன்ச் பீஸ்
  20. ஏலக்காய் - 1

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெஜிடேபுள் ஸ்டாக்கை 3 ½ டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வைக்கவும்.

    அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்,

    குக்கரில் எண்ணை + பட்டரை காயவைத்து காய்ந்த எலுமிச்சை,வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    அடுத்து தக்காளி,தக்காளி பேஸ்ட் மற்றும் அரபிக் மசாலாவை சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.

    அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து சமப்படுத்தி.காய் வெந்ததும் அதில் வெஜிடேபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 2, 3 விசில் விட்டு இரக்கவும், சுவையான அரபிக் வெஜ் கப்ஸா (அரபிக் பிரியாணி) ரெடி. காய்கறி சல்சாவுடன்சாப்பிட அருமையாக இருக்கும்

  3. 3

    கவனிக்க: அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இந்த பிரியாணி லைட்ஆக அதே நேரத்தில் ஹெல்தியாகவும் இருக்கும். நான்வெஜ் பிரியர்கள் மட்டன் சிக்கனில் செய்துகொள்ளலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
அன்று
Dubai
I am a Food Blogger and You tuber, Blog Name - samaiyal attakaakasam/ Youtube Name - samaiyal attkaasam, I have 30 years experience in my kitchen world, expert in baby food, kids delight, Arabic food, bachelor easy cooking and Traditional recipes. I am posting my recipes both Tamil and English which is http://cookbookjaleela.blogspot.ae http://samaiyalattakaasam.blogspot.ae
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes