ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி

Abdiya Antony
Abdiya Antony @cook_20751641

பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 பெரிய வெங்காயம்
  2. ஒரு கப் கடலை மாவு 250 கிராம் அளவு
  3. 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. சிறிதளவுசோம்பு
  5. சோடா உப்பு ஒரு பின்ச்
  6. 3உருளைக்கிழங்கு
  7. சோளமாவு தேவைக்கு ஏற்ப
  8. உப்பு தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பெரிய வெங்காயத்தை தோல் உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை உதிரி உதிரியாக பிரித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை சிவப்பு மிளகாய்த்தூள் மற்றும் சோம்பு,உப்பு,சோடா உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறிக் கொள்ளவும். கிளறிய வெங்காயம் தண்ணீர் இல்லாமலும் அதிகமாக கெட்டித்தன்மை இல்லாமலும் சரியான பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய், சிறிய துண்டுகளாக உருண்டையாகவும் உதிரியாக போட்டு எடுக்கவும்பொன்னிறமான நிறத்தில் மாற்றி போட்டு குறைந்தது 2 முதல் 3 நிமிடங்கள் மட்டும் வேக வைத்தால் போதுமானது.

  4. 4

    உருளைக்கிழங்கை நீட்ட நீட்டமாக சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய உருளைக்கிழங்கை 5 முதல் 10 நிமிடம் குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு ஒரு கப் எடுத்துக்கொள்ளவும்.

  5. 5

    உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் செய்யும் பொழுது சிறிதளவு சோளமாவு எடுத்துக்கொள்ளவும். கடலை மாவு சோள மாவு மற்றும் சிறிதளவு சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கட்டி பிடிக்காமல் திக்காக கரைத்து கொள்ளவும். இந்த மாவுக் கரைசலில் உருளைக்கிழங்கை நன்றாக முக்கி சூடான எண்ணெயில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி ரெடி. உருளைக்கிழங்கு மிகவும் மெலிதாக மெல்லிசாக நறுக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Abdiya Antony
Abdiya Antony @cook_20751641
அன்று

Similar Recipes