கேரட் சேமியா பாயசம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Carrot
#Book
இன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.
கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டா
கேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. 3 கேரட்
  2. 3 பாதாம்
  3. 3 முந்திரி
  4. 1/2 கப் சேமியா
  5. 2 கப் தண்ணீர்
  6. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  7. 1 சிட்டிகை உப்பு
  8. 2 கப் பால்
  9. 1/2 கப் சர்க்கரை
  10. 1 டேபிள் ஸ்பூன் பொடித்த பாதாம்
  11. 10 முந்திரி
  12. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  13. 6 திராட்சை
  14. 1டேபிள் ஸ்பூன் சார பருப்பு
  15. 1 சிட்டிகை குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    கேரட் 3 தோல் நீக்கி கழுவி, பாதாம் 3,முந்திரி 6,எடுத்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும். கேரட் 1 தோல் நீக்கி கழுவி துருவி வைக்கவும்.வெந்த கேரட் மற்றும் முந்திரி பாதாம் ஆறவிடவும்.தண்ணீர் வடித்து விடவும்.பாதாம் தோல் நீக்கி விடவும்.

  2. 2

    சேமியா 1/2 கப் எடுத்து கடாயில் நெய் 1 டீஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதில் தண்ணீர் 2 கப் சேர்த்து வேக விடவும்.ஆறவிட்டதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைக்கவும்.

  3. 3

    துருவிய கேரட்டை சேமியாவுடன் சேர்த்து வேக விடவும்.1 சிட்டிகை உப்பு சேர்க்கவும்.வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு பால் 2 கப் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  4. 4

    நன்கு வெந்தவுடன் சர்க்கரை 1/2 கப் சேர்க்கவும்.கலக்கி விடவும்.

  5. 5

    சர்க்கரை கரைந்தவுடன் ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.குங்குமப்பூ பாலில் 1 சிட்டிகை ஊற விடவும்.முந்திரி 10,நறுக்கி பாதாம் 1 டேபிள் ஸ்பூன்,சார பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,திராட்சை 6 எடுத்து வைக்கவும்.

  6. 6

    கடாயில் நெய் 2 டேபிள் ஸ்பூன் விட்டு முந்திரி, திராட்சை பொடித்த பாதாம், சார பருப்பு சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.ஊறிய குங்குமப்பூ சேர்க்கவும்.சுவையான கேரட் சேமியா பாயசம் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes