எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1/2கப் துவரம்பருப்பு
  2. 1முருங்கைக்காய்
  3. 10சின்ன வெங்காயம்
  4. 1எலுமிச்சை அளவு புளி
  5. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  7. உப்பு
  8. தாளிக்க
  9. 2 டீஸ்பூன் நெய்
  10. 1டீஸ்பூன் கடுகு
  11. 1வரமிளகாய் கிள்ளியது
  12. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    10 சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி கழுவி வைக்கவும். 1 முருங்கைக்காயை நறுக்கி வைக்கவும். 1/2கப் துவரம் பருப்பை கழுவி,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வேக வைக்கவும்.

  2. 2

    1 எலுமிச்சை அளவு புளியை கழுவி ஊறவைக்கவும். வெந்த பருப்பில் நறுக்கி வைத்த முருங்கைக்காய் சின்ன வெங்காயத்தை சேர்த்து 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வேகவிடவும்.

  3. 3

    முருங்கைக்காய் வெந்தவுடன் புளியை கரைத்து 1/2கப் அளவு புளித்தண்ணீரை சேர்த்து கலக்கி விடவும்.

  4. 4

    கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது சிறிது கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி. 😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes