ராகி ஸ்மைலி

#cookwithfriends
#aishwaryaveerakesari
குழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து ஒரு மிக்ஸிங் பவுலில் எடுத்து கொள்ளவும். பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி மிக்ஸி ஜாரில் அடித்து பிரட் கிரம்சாக எடுத்துக் கொள்ளவும்
- 2
மசித்த உருளைக்கிழங்குடன் பிரெட் கிரம்ஸ், கார்ன் ஃப்ளார், மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 3
பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் இறுதியாக ராகி மாவு சேர்க்கவும்
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இவை அனைத்தையும் நன்கு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டவும்
- 5
சப்பாத்தி தேய்க்கும் கல்லில் சிறிது எண்ணெய் தடவி இந்த உருண்டையை எடுத்து வைத்து சமமாக கைகளால் பெரிய அளவாக தட்டவும். அகலம் அரை இஞ்ச் அளவு இருக்குமாறு தட்டிக் கொள்ளவும்
- 6
வட்ட வடிவ மோல்ட் கட்டர் அல்லது சிறிய வட்ட வடிவ மூடி வைத்து தேய்த்த மாவில் அழுத்தி அந்த ரவுண்டு பகுதியை தனியே எடுக்கவும். இதேபோல் அனைத்து மாவையும் வட்ட வடிவமாக வெட்டி தனியே எடுத்துக்கொள்ளவும்.
- 7
ஒரு ஸ்ட்ரா எடுத்துக் கொள்ளவும். வட்ட வடிவத்தில் ஸ்ட்ராவை பயன்படுத்தி இரண்டு கண் போல் செய்யவும்
- 8
வளைவு உள்ள ஒரு ஸ்பூன் கொண்டு வாய் போன்று செய்யவும். இதேபோன்று ஸ்மைலி போல் அனைத்தையும் செய்யவும்
- 9
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து துண்டுகளைப் போட்டு பொரித்து சிறிது சிவந்ததும் எடுக்கவும்
- 10
ராகி ஸ்மைலி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃


பன்னீர் ஆலு கோஃப்தா


உருளைக்கிழங்கு ரிங்ஸ், ஃபிங்கர்ஸ்


இத்தாலி காளான் சூப்


பிரெட் வடை


ராகி தோசை


ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)


பிரட் உப்புமா


பார்பிக்யூ நேஷன் க்ரிஸ்பி கார்ன் (Crispy corn recipe in tamil)


அரிசி (ரைஸ்)லாலிபாப்


ராகி பிரவுணி # cook with milk


ராகி ரவா பன்னீர் தோசை


ராகி காரதோசை


ஈஸி வெஜிடபிள் மக்ரோனி


மேகி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


பாஸ்தா குர்குரே


காரப் பொங்கல்


வெஜ் ஜிங்கி பார்சல்


ராகி கஞ்சி


ரவா பொங்கல்


மாம்பழ ராகி கும்பிலப்பம்


பீட்ரூட் டெவில்ட் முட்டை


வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)


உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)


ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் சூப்


ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)


மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)


இட்லி பர்கர்


பேபி கார்ன் பெப்பர் பிரை


சிக் பீஸ் பெப்பர் சூப்

கமெண்ட் (5)