எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4நபர்கள்
  1. 100கி பச்சைப்பயிர்
  2. 50கி கடலைப்பருப்பு
  3. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 2 வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 3 பச்சை மிளகாய்
  7. 7 கத்திரிக்காய்
  8. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 2டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  10. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  11. 1/2 கப் புளி கரைசல்
  12. 1பிரியாணி இலை
  13. 1பட்டை
  14. 1லவங்கம்
  15. 2ஏலக்காய்
  16. 1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  17. சிறிதுகறிவேப்பிலை
  18. சிறிதுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் பச்சைப்பயிர், கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    எலுமிச்சை அளவில் புளி எடுத்து ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பச்சை மிளகாய், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், கரம்மசாலா, தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து காய்களை வேகவிடவும்.

  4. 4

    காய் வெந்தவுடன், ஊறவைத்த புளி கரைசலை சேர்த்து, பின் வேகவைத்த பருப்புகளை சேர்த்து, 5நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.

  5. 5

    பின்னர் வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் மீதி இருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வதக்கின எல்லாவற்றையும், அந்த தால்சா வில் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes