தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1டம்ளர் பாஸ்மதி அரிசி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 பச்சை மிளகாய்
  6. கையளவு கொத்தமல்லி, புதினா
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/4ஸ்பூன் கரமசாலா
  11. 1/2 எலுமிச்சை பழச்சாறு
  12. 1 1/2டம்ளர் தண்ணீர்
  13. 2 பட்டை
  14. 2பிரியாணி இலை
  15. 3 கிராம்பு
  16. 2 ஏலக்காய்
  17. சிறுதுண்டு மராட்டி மொக்கு
  18. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  19. 1டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    பிறகு தக்காளி சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  4. 4

    தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  5. 5

    நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.குக்கரில் தண்ணீர் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து இதில் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    பின்னர் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட்டு கரமசாலா சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

  7. 7

    சூப்பரான சுவையில் குஸ்கா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes