தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 8கோவக்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 4பல் பூண்டு
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  7. உப்பு
  8. மசாலா அரைப்பதற்கு:
  9. 1/2டீஸ்பூன் சோம்பு
  10. 1/2டீஸ்பூன் மிளகு
  11. 1டீஸ்பூன் தனியா
  12. 1/2டீஸ்பூன் சீரகம்
  13. 2கிராம்பு
  14. 1சிறிய துண்டு பட்டை
  15. 1சிறிய துண்டு இஞ்சி
  16. 4 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  17. தாளிக்க:
  18. 4 டீஸ்பூன் ஆயில்
  19. 1டீஸ்பூன் கடுகு
  20. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  21. 1வரமிளகாய் கிள்ளயது
  22. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    8 கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும் பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி வைக்கவும் மசாலா அரைப்பதற்கு 1/2 டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் மிளகு, 1 துண்டு இஞ்சி, 2 கிராம்பு,4 டீஸ்பூன் தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 சிறிய துண்டு பட்டை எடுத்து வைக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.

  2. 2

    சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து விழுதாக எடுத்து வைக்கவும்.கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம்,4 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும். அதனுடன் நறுக்கிய கோவக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.

  4. 4

    கோவக்காய் நன்கு வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும்.

  5. 5

    மசாலா நன்கு வெந்து தண்ணீர் வற்றி,நன்கு சுருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கோவக்காய் மசாலா கறி ரெடி😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes