முருங்கைக்காய் சாம்பார்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
7 பேர்
  1. 100கிராம் துவரம் பருப்பு
  2. 15சின்ன வெங்காயம்
  3. 2முழு பூண்டு
  4. 2முருங்கக்காய்
  5. தக்காளி
  6. 3பச்சை மிளகாய்
  7. 2கத்தரிக்காய்
  8. சிறியலெமன் அளவு புளி
  9. 2ஸ்பூன் தேங்காய் துருவல்
  10. 3ஸ்பூன் சாம்பார் தூள்
  11. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. தாளிக்க: கடலை எண்ணெய்
  14. கடுகு
  15. வரமிளகாய்
  16. உளுந்து
  17. கருவேப்பிலை,

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கழுவி அதனுடன் தக்காளி, பூண்டு,மிளகாய், 10வெங்காயம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து 6 விசில் விட்டு வேக வைக்கவும்.

    (இங்கே சேர்த்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளியை பருப்புடன் வேக வைக்காமல் அடுத்த ஸ்டெப்பில்,தாளிப்பில் சேர்த்து கூட வதக்கலாம்)

  2. 2

    ஒரு கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய 5சின்ன வெங்காயம் தாளித்து,நறுக்கிய முருங்கைக் காய்களை சேர்த்து கிளறவும்.உப்பு சேர்த்து,2-3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

  3. 3

    இதனுடன்,புளிக்கரைசல் சேர்த்து,பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    பின்னர் வேகவைத்த பருப்பு கலவையை மசித்து சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    பத்து நிமிடங்கள் கொதித்தால், முருங்கைக்காய் நன்றாக வெந்து விடும்.

  6. 6

    பின்,சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக, கொதிக்க விடவும்.

  7. 7

    பின்பு துருவிய தேங்காயை மிக்ஸியில் பல்ஸ் மோடில் அரைத்து,சாம்பாரில் சேர்க்க வேண்டும். தேங்காய் சேர்த்ததும்,குழம்பு கெட்டியாகும். தேவையெனில், தண்ணீர் சேர்க்கவும்.

  8. 8

    உப்பு சரிபார்க்கவும். 2-3நிமிடங்கள் கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி வேறு ஃபௌலுக்கு மாற்றலாம்.

  9. 9

    கடைசியாக, வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கலாம்.

  10. 10

    அவ்வளவுதான். சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes