மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#pongal2022
இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா "

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2 கி மட்டன்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 10 பல் சின்ன வெங்காயம்
  4. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  5. 4 வத்தல்
  6. 1 தக்காளி
  7. 2 கைப்பிடி அளவு கருவேப்லை
  8. 1 ஸ்பூன் மிளகு, சீரகம்,குண்டு மல்லி
  9. 2 ஸ்பூன் சோம்பு
  10. தேவைக்கேற்ப தண்ணீர்,எண்ணெய்
  11. சுவைக்கேற்பஉப்பு
  12. 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  13. 3 ஸ்பூன் குழம்புத்தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதில் 1 ஸ்பூன் சீரகம், மிளகு, 1 inch இஞ்சி, 5 பூண்டு, 1 பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு, மஞ்சள்த்தூள், 1 தக்காளி சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து வேக வைக்கவும்

  3. 3

    பின் மசாலா தயார்ச் செய்யவும் கடாயில் வெறும் வறுப்பாக 1 ஸ்பூன் சோம்பு, சீரகம், மிளகுச் சேர்த்து வறுக்கவும்

  4. 4

    பின் 1 ஸ்பூன் குண்டு மல்லி, 2 வத்தல் பின் ஒருக் கைப்பிடி அளவு கருவேப்லைச் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதக்கியதை சூடு ஆறவும் பொறபொறப்பாக அரைக்கவும்

  6. 6

    பின் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சோம்பு நறுக்கிய பெரிய வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் 2 வத்தல், ஒருக்கைப்பிடி அளவு கருவேப்லை பின் உப்புச் சேர்த்து வதக்கவும்

  8. 8

    பின் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும் பின் சிறிதாக நறுக்கிய 10 பல் சின்ன வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்

  9. 9

    பின் 1 தக்காளியைச் சேர்த்து வதக்கியதும் அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் 3 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கவும்

  10. 10

    பின் மட்டன் வேக வைத்த தண்ணீருடன் மட்டனைச் சேர்த்து பின் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்

  11. 11

    நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரியும் போது இறக்கி பறிமாறவும் மட்டன் சுக்கா வருவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes