மேகி பக்கோடா

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#ஸ்நாக்ஸ்ரெசிபிவகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 140 கிராம் மேகி
  2. 1வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 1கேரட்
  5. 1 டீஸ்பூன் வெண்ணெய்
  6. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/4 டீஸ்பூன் ஓரிகேனோ
  8. 1 கியூப் சீஸ்
  9. 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  10. 1 டீஸ்பூன் மேகி மசாலா
  11. 1/2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  12. 2 டீஸ்பூன் மைதா மாவு
  13. 500 மிலி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    70 கிராம் மேகியை 200 மிலி தண்ணீரில் வேக வைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கவும்.

  3. 3

    கேரட், சீஸ் துருவிக் கொள்ளவும்.

  4. 4

    மைதா மாவை தண்ணீரில் நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    மீதி உள்ள மேகியை பொடித்துக் கொள்ளவும்.

  6. 6

    வேக வைத்த மேகியுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெண்ணெய், கேரட் துருவல், சீஸ் துருவல், சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகேனோ, கொத்தமல்லி தழை, மேகி மசாலா சேர்த்து நன்றாக பிசையவும்.

  7. 7

    ஒரு எண்ணெய் தடவிய தட்டில் இந்த மேகி கலவையை நன்றாக பரப்பி அதனை குளிர் சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும்.

  8. 8

    30 நிமிடங்கள் பிறகு வெளியே எடுத்து சதுர வடிவில் கட் செய்யவும்.

  9. 9

    இந்த மேகி சதுரங்களை மைதா கரைசலில் முக்கிய எடுத்து பொடித்து வைத்துள்ள மேகியில் பிரட்டவும்.

  10. 10

    வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் பொரித்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes