நெல்லிக்காய் ரசம்

kathija banu
kathija banu @cook_18717570

#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்
நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  2. 7கருவேப்பிலை
  3. 3 டேபிள்ஸ்பூன்துவரம் பருப்பு
  4. தேவையான அளவுஉப்பு
  5. 3 கப்தண்ணீர்
  6. தேவையான பொருள்கள்அரைக்க
  7. 1.5 டீஸ்பூன்மல்லி
  8. 1 டீஸ்பூன்சீரகம்
  9. 1/2 டீஸ்பூன்மிளகு
  10. 1மிளகாய்
  11. 1 மீடியம் சைஸ்தக்காளி
  12. 2 சிறிய துண்டுஇஞ்சி
  13. 3நெல்லிக்காய்
  14. 1/2 கப்கொத்தமல்லி
  15. தேவையான பொருள்தாளிக்க
  16. 2 டீஸ்பூன்நெய்
  17. 1 டீஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக்க தேவையான பொருளை எடுத்து கொள்ளவும்

  2. 2

    இடி கல்லில் அரைத்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்ததை ஒரு சட்டியில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருவேப்பிலை மஞ்சள் தூள் மற்றும் உப்பு போடவும்

  4. 4

    இதை நன்றாக கொதிக்க விடவும் கொதி வந்தவுடன் பருப்பு கலந்த தண்ணீர் ஊற்றவும்

  5. 5

    திரும்பவும் கொதி வந்தவுடன் கேஸ் ஸ்டவ் அணைத்து விட வேண்டும்.. பிறகு தாளிக்க செய்யவும்

  6. 6

    உங்கள் சுவையான நெல்லிக்காய் ரசம் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kathija banu
kathija banu @cook_18717570
அன்று

Similar Recipes