எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. பச்சை பட்டானி 50 கிராம்
  3. வெங்காயம் 1,
  4. தக்காளி 1,
  5. 2பச்சை மிளகாய்
  6. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  7. வெள்ளை எள்ளு 1 ஸ்பூன்
  8. மீட் மசாலா 1/2 ஸ்பூன்
  9. சீரகதூள் 1/2 ஸ்பூன்
  10. தனியா தூள் 1/2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  12. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  14. மல்லிதழை சிறிது
  15. உப்பு தேவைக்கு
  16. எண்ணெய் சிறிது
  17. கெட்டியான தேங்காய் பால்
  18. [அல்லது ]
  19. ப்ரஸ் கிரீம் 1/2 கப்
  20. பூண்டு 5 பல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயம், தக்காளி. மல்லிதழை பூண்டு நறுக்கி கொள்ளவும், பிறகு சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும், பிறகு சிக்கனில் சிறிது உப்பு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மீட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும், பிறகு ஒரு கிரில் பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளவும்,,

  2. 2

    பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் எள்ளு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும், பிறகு வெங்காயம் போடவும் வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் தக்காளி பச்சை மிளகாய், போட்டு மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள், சீரகதூள், மல்லிதூள், போட்டு வதக்கவும், பிறகு அதில் பட்டானி போட்டு நன்கு வதக்கி வேகவிடவும். வெந்ததும் ஆற வைத்து அரைத்து கொள்ளவும்,

  3. 3

    பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த மசாலாவை போட்டு அரை நிமிடம் வதக்கி பிறகு அதில் சிக்கனை போட்டு 2 நிமிடம் வேகவிடவும். பிறகு அதில் ப்ரஷ் கிரீம் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விட்டு மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான மட்டர் சிக்கன் தயார்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

Similar Recipes