ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் பொடியாக நறுக்கிய கோஸ்
  2. 1கப் மைதா
  3. 1/2கப் கார்ன் ப்ளார்
  4. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 2சிட்டிகை சிவப்பு ஃபுட் கலர்
  6. 2பெரிய வெங்காயம் நறுக்கியது
  7. 2தக்காளி அரைத்த விழுது
  8. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 1ஸ்பூன் சோயா சாஸ்
  10. 1ஸ்பூன் தக்காளி சாஸ்
  11. 1ஸ்பூன் கார்ன் ப்ளார்
  12. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு
  13. பொரித்தெடுக்க எண்ணெய்
  14. சிறிதளவுகொத்தமல்லி இலை
  15. தேவையானஅளவு உப்பு
  16. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கோஸ், மைதா, கார்ன் ப்ளார், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, 1சிட்டிகை ஃபுட் கலர் எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கோஸை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்

  3. 3

    கடாயில் சிறிது மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்

  4. 4

    வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்

  6. 6

    மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

  7. 7

    எல்லாம் வதங்கியதும் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்

  8. 8

    வதங்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  9. 9

    அதில் பொரித்து வைத்துள்ள கோஸை சேர்த்து வதக்கவும்

  10. 10

    1ஸ்பூன் கார்ன் பிளார் மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கோஸ் கலவையில் ஊற்றி நன்கு கலந்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

  11. 11

    இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து கொள்ளவும் இது சூடாக சாப்பிட அருமையாக இருக்கும்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes