எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 1கப் அரிசி மாவு
  3. 1மேசைக்கரண்டி மைதா மாவு
  4. 1மேசைக்கரண்டி கடலைமாவு
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 1ஸ்பூன் மிளகு
  8. 1 வெங்காயம்
  9. சிறியதுண்டு இஞ்சி
  10. 1 பச்சை மிளகாய்
  11. சிறிதளவுகறிவேப்பிலை
  12. சிறிதளவுகொத்தமல்லி
  13. 1/2கப் தேங்காய்
  14. 1/4கப் பொட்டுகடலை
  15. 1பல் பூண்டு
  16. 2 பச்சை மிளகாய்
  17. சிறியதுண்டு புளி
  18. சிறிதளவுவெங்காயம்
  19. சிறியதுண்டு இஞ்சி
  20. 1 காய்ந்த மிளகாய்
  21. 1ஸ்பூன் கடுகு
  22. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  23. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் அரிசி மாவு, ரவை, மைதா மாவு, கடலைமாவு, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கிளறி விட்டு வெங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி இதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

  2. 2

    இந்த கலவையை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மோர் போன்று கலந்து வைக்கவும்.அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் தடவி அதன் மேல் இந்த மாவை தெளிப்பது போல ஊற்றி கொள்ளவும்.

  3. 3

    பிறகு சுற்றி எண்ணெய் விட்டு நன்கு வெந்து பொன்னிறமாக மொறு மொறு வந்ததும் எடுத்து கொள்ளவும். ரவை தோசை தயார்.

  4. 4

    தேங்காய் சட்னி செய்முறை: மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுகடலை, பச்சை மிளகாய், பூண்டு பல், இஞ்சி, பூண்டு பல், வெங்காயம் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றவும். சூப்பரான ரவை தோசை மற்றும் சட்னி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes