எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4கிலோ சிக்கன்
  2. 3/4டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/2டீஸ்பூன் தனியாத்தூள்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1நறுக்கிய வெங்காயம்
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  9. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. உப்பு
  11. நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் கழுவிய சிக்கன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள் தூள் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் வேக விட்டு எடுக்கவும்

  2. 2

    சிக்கன் வெந்ததுக்கு பிறகு தண்ணீர் வடித்து படத்தில் காட்டியவாறு எலும்பு நீக்கிவிட்டு பிச்சி போட்டுக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் எப்படி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு பிச்சுபோட்ட சிக்கனை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும் பிறகு இதனுள் சிக்கன் வேக வைத்த தண்ணீர் அரை கப் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்

  4. 4

    சிக்கன் தண்ணீர் வற்றிய பிறகு அதிக தீயில் வைத்து மிளகுத்தூள் கருவேப்பிலை கொத்தமல்லி தூவி ஒரு நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்... பிச்சி போட்டு சிக்கன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes