மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4-6 பரிமாறுவது
  1. 3/4 கிலோ எலும்பில்லா மட்டன்
  2. ஊறவைக்க
  3. 2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  5. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2டேபிள் ஸ்பூன் தயிர்
  7. மட்டன் வேக வைக்க
  8. 1டீஸ்பூன் கரம் மசாலா
  9. 2நறுக்கிய வெங்காயம்
  10. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. மட்டன் குழம்பு
  12. 25 சின்ன வெங்காயம்
  13. 7 பூண்டு பல்
  14. 1 டீஸ்பூன் மட்டன் மசாலா
  15. நெல்லிக்காய் அளவுபுளி (கரைத்து கொள்ளவும்)
  16. மட்டன் சுக்கா
  17. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  18. கொத்தமல்லி இலை
  19. கறி தோசை
  20. 1 கப் தோசை மாவு
  21. 1 முட்டை
  22. கொத்தமல்லி இலை
  23. கறி பணியாரம்
  24. 1 கப் இட்லி மாவு
  25. 1 முட்டை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    எலும்பில்லாத மட்டனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பிறகு இதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள் தயிர் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கரம் மசாலா சேர்க்கவும் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு ஊறவைத்த மட்டனை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்

  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3-4 விசில் விடவும்

  4. 4

    மட்டன் குழம்பு இருக்கு சிறிது வேக வைத்த மட்டனை எடுத்து கொள்ளவும் பிறகு ஒரு வட சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பூண்டை நன்றாக வதக்கவும் பிறகு இதில் மட்டன் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி ஆறிய பின் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும் பிறகு சிறிது எண்ணெய் விட்டு இதில் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்

  5. 5

    பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கிளறி உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் குழம்பு கெட்டியானதும் புளிக்கரைசலை சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

  6. 6

    குக்கரில் மீதமிருக்கும் மட்டனில் சிறிது மிளகுத்தூள் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும் மட்டன் சுக்கா தயார்

  7. 7

    இப்போது தோசை சட்டியில் சிறிது எண்ணெய் தடவி படத்தில் காட்டியவாறு தோசை வார்க்கவும் பிறகு அதில் முட்டையை சேர்த்து எல்லாப்பக்கமும் படுமாறு தடவி கொள்ளவும் படத்தில் காட்டியவாறு மட்டன் சுக்கா அதன்மேல் வைத்து மூடி போட்டு 2 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் பிறகு தோசையை திருப்பி போட்டு 30 நொடிகள் வைக்கவும் பிறகு அதிக தீயில் இரண்டு பக்கமும் 15 நொடிகள் வைத்து எடுத்தால் மட்டன் கறி தோசை தயார்

  8. 8

    இட்லி மாவில் ஒரு முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு பணியார சட்டியில் சிறிது எண்ணெய் தடவி முக்கால் பாகம் வரை மாவு ஊற்றவும் பிறகு மாவினுள் மட்டன் சுக்கா வைத்து மேலாக சிறிது மாவை ஊற்றவும் இப்போது இருபுறமும் சுட்டு எடுக்கவும் மட்டன் கறி பணியாரம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes