சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும் அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை பொடி (நைசாக அரைக்க வேண்டாம்) வேர்க்கடலை பொடித்தது தேங்காய் துருவல் சேர்த்து வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்
- 2
பின் பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மல்லித்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, புதினா, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போடவும்
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
இவ்வாறு அனைத்து கோப்தாவையும் பொரித்து எடுக்கவும்
- 6
கோப்தா கிரேவி செய்ய: மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 7
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
- 8
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 9
நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 10
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 11
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்தக்காளி நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 12
பின் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
- 13
அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் நன்றாக அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை நெய் கசிந்து வரும் வரை வதக்கவும்
- 14
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் பொரித்த கோப்தாவை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து 5_8 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 15
பின் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 16
ஆலு கோப்தா கிரேவி ரெடி நெய் வேண்டாம் என்றால் எண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றலாம் கோப்தா எண்ணெயில் பொரிக்கும் போது பிரிந்து போனால் சிறிது பொட்டுக்கடலை மாவு ஐ சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் எண்ணெயில் போட்டதும் உடனே திருப்ப கூடாது மெதுவாக ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும் வேர்க்கடலை எண்ணெயில் பொரியும் போது கோப்தாவிற்கு நல்ல மணத்தை கொடுக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆலு சமோசா


கம்பு வாழைப்பூ வடை


ஆலு பரோட்டா


பேபி கார்ன் 65


காளான் கிரேவி


பன்னீர் கிரேவி


ஆலு பரோட்டா


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)


கோவைக்காய் ரைஸ்


ஆலு சீஸ் சாண்ட்விச்


பலா உருளை கிரேவி


உருளைக்கிழங்கு ரோல்


கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்


சோளம் கிரேவி


சிக்கன் கிரேவி


சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)


சிக்கன் குருமா


ஆலு மட்டர் சாகு / aloo matar saagu


காலிஃபிளவர் கிரேவி


தயிர் வெண்டைக்காய்


மலாய் கோஃப்தா கிரேவி


ஓமவல்லி வெங்காய பக்கோடா


பிரியாணி கிரேவி


பன்னீர் கிரேவி


தந்தூரி சிக்கன்


சில்லி மற்றும் கொத்து பரோட்டா


தண்டுக்கீரை முட்டை பொறியல்


சென்னா சாட் (Channa chaat recipe in tamil)


சிக்கன் டிக்கா ஆம்லெட்


🍅🍅ஸ்டஃப்டு தக்காளி கிரேவி🍅🍅

கமெண்ட் (7)