தேவையான பொருட்கள்

  1. 15சின்ன வெங்காயம்
  2. 1தக்காளி
  3. கால் கிலோகதம்ப காய்கறிகள்
  4. நூறு கிராம்துவரம் பருப்பு
  5. புளி எலுமிச்சை பழ அளவு
  6. சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  7. 8வர மிளகாய்
  8. 2 டேபிள்ஸ்பூன்மல்லி
  9. ஒன்னரை டீஸ்பூன்சீரகம்
  10. ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு
  11. மிளகு ஒ வெந்தயம் கால் டீஸ்பூன்ரு டீஸ்பூன்
  12. கால் டீஸ்பூன்பெருங்காயம்
  13. தாளிப்பதற்கு கடுகு கருவேப்பிலை வெந்தயம் சீரகம் வரமிளகாய்
  14. ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்புடன் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கதம்ப காய்கறிகளுடன் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வேகவைத்த காய்கறிகளுடன் பருப்பை சேர்க்கவும் அதனுடன் புளிக் கரைசலையும் சேர்க்கவும்.

  3. 3

    சாம்பார் பொடி அரைப்பது தேவையான பொருட்களை மிதமான தீயில் வைத்து நன்கு சிவப்பாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு சாம்பார் பொடி மஞ்சள் தூள் சேர்த்து குழம்பு பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வெந்தயம் வரமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும் நெல்லை ஸ்பெஷல் சுவையான காரசாரமான கதம்ப சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes