முருங்கை கீரை மிளகு சூப்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. ஒரு பெரிய கப்முருங்கை கீரை
  2. சிறிய துண்டுஇஞ்சி
  3. 10 பல்பூண்டு
  4. 1 ஸ்பூன்நெய்
  5. 2 சிறிதுபட்டை
  6. 3கிராம்பு
  7. 10சிறியவெங்காயம்
  8. 1/2 லிட்டர்அரிசி கழுவிய தண்ணீர்
  9. 1 ஸ்பூன்மிளகு தூள்
  10. 2 டீஸ்பூன்சீரகத்தூள்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் முருங்கை கீரை கழுவி வைக்கவும் பிறகு வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும் பிறகு அரிசியை கழுவி இரண்டாவது அரிசி தண்ணீரை எடுத்து வைக்கவும் பிறகு இஞ்சி பூண்டை குளவி கல்லில் இடித்து வைக்கவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அரிசி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    அப்போது முருங்கை கீரையை சேர்த்து வெந்ததும் ஜீரகம் தூள் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.அதிகநேரம் கீரையை வேக விட வேண்டாம் வெந்தால் கசப்பு வந்து விடும்10 நிமிடம் போதுமானது

  4. 4

    பிறகு இதனை வடிகட்டி யால் வடிகட்டவும் சுவையான ஆரோக்கியமான புரதம் இரும்பு சத்து நிறைந்த இயற்கையான முறையில் செய்த சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes