மல்டி வெஜ்  ரைத்தா (curd)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#கோல்டன் ஆப்ரன் 3
கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள் வாழைத்தண்டு மற்றும்
நான்கு பேர்
  1. கெட்டி தயிர் ஒரு கப்
  2. அரிந்த வெள்ளைப் பூசணிக்காய் 2 ஸ்பூன்
  3. அரிந்த சிகப்பு பூசணிக்காய் 2 ஸ்பூன்
  4. துருவிய கேரட்2 ஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய தக்காளி 1 ஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 6
  7. நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  8. கருவேப்பிலை கொத்தமல்லி தலை சிறிதளவு
  9. சிறிது பெருங்காயத்தூள்
  10. தாளிக்க கடுகு 1/4 ஸ்பூன்
  11. சீரகம் 1ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள் வாழைத்தண்டு மற்றும்
  1. 1

    காய்கறிகளை கழுவி அறிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தயிரையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெள்ளை மற்றும்சிவப்பு பூசணி இரண்டையும் 5 நிமிடம் தண்ணீரில் குழய விடாமல் வேகவிட்டு தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை லேசாக எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் என்னை விட்டு கடுகு சீரகம் பெருங்காயத்தூள் தாளித்துக் கொள்ளவும்.

  3. 3

    வேகவைத்த காய்கறிகளுடன் துருவிய கேரட்டையும் வதக்கிய தக்காளியையும் தாளித்த கடுகு சீரகத்தையும் தயிரில் உப்பு சேர்த்து கலக்கவும். அரிந்த ப. மிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி இவைகளை பச்சையாக சேர்க்கவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கி விடவும். சுவைக்கு துருவிய தேங்காய் பூ ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றுடன் வாழைத்தண்டு மற்றும் பெரு நெல்லிக்காய் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.சுவை மேலும் கூடும். ஆரோக்கியம் அபரிதமாக பெருகும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes