தேவையான பொருட்கள்

15 minutes
3 பரிமாறுவது
  1. கேரட் 2
  2. கடலைப்பருப்பு 1மேசைக்கரண்டி
  3. உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
  4. சிறியவெங்காயம் 1
  5. காய்ந்த மிளகாய் 1 அல்லது 2
  6. புளி சிறிய துண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயத்தூள் சிறிதளவு
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை சிறிதளவு
  11. எண்ணெய் 2 மேசைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    கேரட்டை தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வைத்து கொள்ளலாம்.

  2. 2

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு இதில் துருவிய கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கி ஆற வைத்து கொள்ளவும்.இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும். ஆரோக்கியமான சுவையான கேரட் சட்னி தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes