எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 15 சின்ன வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 10 பல் பூண்டு
  5. 2 துண்டு இஞ்சி
  6. 1 ஸ்பூன் சோம்பு
  7. 1 ஸ்பூன் கசகசா
  8. 4 பத்தை தேங்காய்
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. சிறிதளவுகொத்தமல்லி இலை
  11. தேவையானஅளவு உப்பு
  12. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 2 ஸ்பூன் தனியா தூள்
  15. 2 பட்டை
  16. 2 லவங்கம்
  17. 1பிரிஞ்சி இலை
  18. 1 கப் மணத்தக்காளி கீரை காய்
  19. 3 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மண் சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சோம்பு கசகசா சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு அதனை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்போது வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் மற்றும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் வதங்கிய பின் மணத்தக்காளிக் காயை அதில் சேர்த்து வதக்கவும். அரைத்த கலவையை அதில் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  7. 7

    பின்பு அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். மல்லி இலை சேர்த்து சூடாக சப்பாத்தி இட்லி தோசைக்கு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes