எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மட்டன்
  2. 25 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1டீஸ்பூன் கரம் மசாலா
  5. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1டீஸ்பூன் மட்டன் மசாலா
  7. 1/4டேஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1கப் கெட்டி தேங்காய்ப்பால்
  9. மசாலா அரைக்க
  10. 2டீஸ்பூன் மிளகு
  11. 1டீஸ்பூன் சீரகம்
  12. 1/2டீஸ்பூன் சோம்பு
  13. 15 பூண்டு பல்
  14. 1இன்ச் இஞ்சி
  15. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கரம் மசாலா நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் இன்னொரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் மிளகு சீரகம் சோம்பு சேர்த்து நன்றாக வறுத்து அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்... வருத்த இந்த கலவை ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக மிதமான தீயில் வதக்கவும் இதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்

  3. 3

    மட்டன் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் இதன் பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி மட்டனை சேர்க்கவும்

  4. 4

    மட்டனை 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி தேவையான அளவு உப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 3 முதல் 4 விசில் விடவும்

  5. 5

    இப்போது மட்டன் வெந்ததும் இதனுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும்

  6. 6

    இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும் மேலே எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து கொத்தமல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும்... மட்டன் மிளகு குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes