செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்

Archana
Archana @cook_25613588
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோசிக்கன்
  2. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  3. 1வெங்காயம் - (நறுக்கியது)
  4. 3பச்சை மிளகாய் - (கீறியது)
  5. சிறிதுகறிவேப்பிலை
  6. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 3 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி - (நறுக்கியது)
  10. செட்டிநாடு மசாலாவிற்கு..
  11. 3 டேபிள் ஸ்பூன்மல்லி
  12. 1 டீஸ்பூன்சீரகம்
  13. 5-6வரமிளகாய்
  14. 1 டேபிள் ஸ்பூன்சோம்பு
  15. 3 இன்ச்பட்டை
  16. 2 துண்டுகல்பாசி
  17. 4ஏலக்காய்
  18. 4கிராம்பு
  19. 1டீஸ்பூன்மிளகு
  20. 1அன்னாசிப்பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

  4. 4

    பிறகு சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் மிதமான தீயில் சிக்கனை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

  5. 5

    இப்போது சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவந்திருக்கும். இந்நிலையில் மீண்டும் சிக்கனை பிரட்டி விட்டு, மூடி வைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைக்க வேண்டும்.

  6. 6

    சிக்கன் நன்கு வெந்ததும், தீயை அதிகரித்து, அதில் மசாலா பொடியை சேர்த்து 1 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Archana
Archana @cook_25613588
அன்று

Similar Recipes